விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்கலன்னா தவெகவுக்கு ஆதரவா..? அதிமுக மூத்த தலைவர் பதில்..!

eps vijay 1

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால் அதிமுக ஆதரவு அளிக்குமா என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பதில் அளித்தார்..


இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் ” தவெகவை பொறுத்தவரை கணக்கை துல்லியமாக போட்டு பார்த்தால், அவர்களுக்கு நகர்ப்புற பகுதிகளில் திமுகவுக்கு ஏற்பட்ட தொய்வு, தவெகவுக்கு வெற்றியாக அமைந்துள்ளது..
காரணம் நகர்ப்புற வாக்கை பொறுத்தவரை 10% வாக்கு மட்டுமே பெற முடிந்துள்ளது..

90 சதவீதம் வாக்குகள் கிராமப்புற வாக்குகள் உள்ளன.. ஊரக வாக்குகளை எண்ணும் போது தான் தவெகவின் நிலை பின் தங்கிவிடும்.. மற்ற இயங்கங்கள் முன்னுக்கு வர வாய்ப்புள்ளது.. ஊரக பகுதிகள் தான் முடிவு செய்யும்..” என்று கூறினார்.. அப்போது செய்தியாளர்கள், அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டனர்..

அதற்கு பதிலளித்த பொன்னையன் ” தவெகவை பொறுத்தவரை, அது தனிக்கட்சி, தவெக, அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்..” என்று கூறினார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் ஆவார்.. அதுவே தேர்தல் முடிவாக இருக்கும்..” என்று கூறினார்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.. திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது..

தவெக இதுவரை 105 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.. திமுக 68 இடங்களிலும் அதிமுக 60 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது..

RUPA

Next Post

திமுகவால் வருத்தம்.. தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ்..? தேர்தல் முடிவுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பரபர ட்வீட்..!

Mon May 4 , 2026
Is Congress leaving the DMK alliance? Karti Chidambaram tweets incessantly about the election results!
vijay karthi chidambaram

You May Like