தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய தவெக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் பெற்றுள்ளது.. திமுக கூட்டணிக்கு 73 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியும்.. ஆனால் எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..
இதனிடையே தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த தேர்தலில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள்ளது.. தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர் பின்னடைவை சந்தித்து இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.. தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமாவை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் ஏற்றார்.. புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக ஸ்டாலின் தொடர்வார்..



