தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி தொடர்கிறது.. இந்த சூழலில் டிடிவி தினகரன் நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அது போலி என அமமுக தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு பதிலாக தவெக தரப்பு வீடியோ வெளியிட்டு, காமராஜ் தன்னிச்சையாக ஆதரவு அளித்ததாக விளக்கம் அளித்தது..
இந்த நிலையில் சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்தார்… அப்போது பேசிய அவர் தவெகவும், விஜய்யையும் கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் ” அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அந்த ஆதரவு கடிதம் எங்கே..? காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக கூறும் வீடியோவை எடுத்தது யார்..? அந்த வீடியோவை எடுத்தது விஜய்யா? செங்கோட்டையனா..? ஆதவ் அர்ஜுனாவா?
காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அந்த ஆதரவு கடிதம் எங்கே..? அந்த ஒரிஜினல் வீடியோ எங்கே..? அந்த வீடியோ எங்கு வைத்து எடுக்கப்பட்டது..? யார் வீடியோவை எடுத்தது..? ஒரிஜினல் ஆதரவுக் கடிதத்தை காண்பிக்க முடியுமா..? யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்.. முதலமைச்சராக வருவதற்கே விஜய் ஃபோர்ஜரி செய்கிறார்.. மோசடிகளுக்கு பின்னால் இருப்பது விஜய் தான்.. குதிரை பேரத்திற்காகவே விஜய் இதை செய்கிறார்.. முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று கூறியவர், எனது ஒப்புதலின்றி எப்படி தவெகவினர் ஆளுநரிடம் எங்களது ஆதரவு கடிதம் என ஒன்றை அளிக்கலாம்..? காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியிட்ட வீடியோவில் இருப்பது காமராஜ் அல்ல, ஏஐ வீடியோ..
குதிரை பேரம் நடப்பதற்காக தான் மோசடி கடிதம் ஒன்றை கொடுத்திருப்பதாக தெரிவித்தேன்.. ஆதரவு கடிதம் தொடர்பாக நடந்த மோசடிக்கு பின்னால் விஜய் இருக்கலாம்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேரழிவு உறுதி..” என்று காட்டமாக விமர்சித்தார்..
Read More : தவெகவுக்கு ஆதரவா..? விசிக அலுவகத்திற்கு வந்த புதிய சோபா.. விறுவிறுப்பாக தயாராகும் அலுவலகம்..!



