தவெகவுக்கு ஆதரவா..? விசிக அலுவகத்திற்கு வந்த புதிய சோபா.. விறுவிறுப்பாக தயாராகும் அலுவலகம்..!

vck office

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் பலம் இல்லாததால், கூட்டணி மற்றும் வெளி ஆதரவைப் பெற தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


தேர்தல் முடிவுகள் வெளியானதும், காங்கிரஸ் கட்சி முதன்முதலாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சென்னை அண்ணாநகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பரபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருமாவளவன் தனது நிலைபாட்டை தெரிவிக்க உள்ள நிலையில் விசிக அலுவலகத்திற்கு புதிய சோபாக்கள் கொண்டு வரப்பட்டது எதிர்பார்ப்பை அதிகரித்த வைத்துள்ளது.

விசிகவின் நிலைபாடு பற்றி திருமாவளவன் தெரிவித்த உடனே தவெக தலைவர் விஜய் திருமாவளவனை நேரில் சந்தித்து நேரில் சந்திக்க உள்ளார். இதனால் விசிக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more: EPS-ன் அடுத்த மூவ்.. புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் அதிமுக MLA-க்கள்..! பரபரப்பு உச்சம்..

English Summary

Support for tvk..? New sofa arrived at VCK office.. Office is getting ready in full swing..!

Next Post

விஜய் எனக்கு மாமனா.. மச்சானா..? தவெகவினர் காட்டியது ஏஐ வீடியோ..! - டிடிவி தினகரன் பரபர பேட்டி..

Sat May 9 , 2026
TVK showed AI video..! - TTV Dinakaran interview..
vijay ttv

You May Like