விசிக பதவிகளை கேட்கிறதா..? அவதூறு பரப்பாதீங்க..! ரவிக்குமார் MP மறுப்பு..!

ravikumar

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. 


இதனிடையே 2 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு என்று தகவல் வெளியானது.. விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கிடைத்ததால் அவர் நாளை காளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.. அதே போல் தவெக ஆட்சியமைக்க விசிகவும் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு முடிவை அறிவிப்பதாக விசிக அறிவித்துள்ளது.. எனினும் விசிக தவெகவிடம் இருந்து அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை கேட்பதாக தகவல் வெளியானது..

இந்த நிலையில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) பல்வேறு பதவிகளை நாடுவதாகவும், கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தற்போது பரப்பப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய செய்திகளுக்கு ஊடகங்கள் எவ்வித அங்கீகாரமும் அளிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணைபோக வேண்டாம் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : “தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்” தவெக பெயரை குறிப்பிடாமல் இபிஎஸ் போட்ட பதிவு..!

RUPA

Next Post

ஏர் கூலரை ஏசியைப் போல மாற்றும் எளிய வழிகள்.. குறைந்த செலவில் கோடை வெயிலை சமாளிக்கலாம்!

Sat May 9 , 2026
Simple ways to turn an air cooler into an AC.. You can beat the summer heat at a low cost!
air cooler

You May Like