வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! இந்த இடங்களில் கனமழை வெளுத்துவாங்கும்..?

rain

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.. கோடை மழையால் வெப்பம் குறைந்து வெப்ப நிலை குறைந்து தமிழ்நாட்டில் சற்று மாறி உள்ளது..


இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.. இதனால் தமிழ்நாட்டில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது..

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்..

நாளை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காற்று, இடி மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..

Read More : எடப்பாடிக்கு பேரிடி.. விஜய் பக்கம் சாயும் அதிமுக MLA-க்கள்..? அதிரும் அரசியல் களம்!

RUPA

Next Post

TVK பேருந்து முதல் BMW கார் வரை.. CM விஜய்யின் ஒவ்வொரு வாகனத்திலும் ஏன் '0277' என்ற எண் இடம்பெற்றிருக்கிறது..?

Mon May 11 , 2026
நடிகர் விஜய்க்கு தனியாக எந்த அறிமுகமும் தேவையில்லை.. அவர் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்ற பிறகு, அவர் அரசியலில் நுழைந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ (Thaveka) என்ற தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார்.. தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த நெருக்கடியை அவர் எப்போது, ​​எவ்வாறு கடந்து ஆட்சியை […]
vijay vehicle num

You May Like