Breaking : முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் CM விஜய்..! ஆரத்தழுவி வரவேற்ற ஸ்டாலின்..!

vijay stalin

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..


முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக முதல்வர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்..

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்தார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்து முதல்வர் விஜய் சந்தித்தார்.. முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் ஆரத்தழுவி வரவேற்று அழைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அழைத்து சென்றார்.. முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பின் போது தங்கம் தென்னரசு, சேகர்பாபு, அ.சக்ரபாணி, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.. தொடர்ந்து வைகோ உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கும் செல்லும் விஜய் அவர்களிடம் வாழ்த்து பெறுகிறார்..

Read More : கருணாநிதியின் மஞ்சள் துண்டு.. MGR-ன் தொப்பி.. விஜயின் கருப்பு கோட்.. தமிழக முதலமைச்சர்களின் ஆடை பின்னணி ஒரு பார்வை..!

RUPA

Next Post

ஆடம்பரக் கார்கள் முதல் பிரம்மாண்ட வீடு வரை; நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Mon May 11 , 2026
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா.. ‘கில்லி’, ’96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ள இந்த நடிகை, பல திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இங்கே, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக முதலமைச்சர் விஜய்யின் காதலி என்று வதந்திகள் பரவும் […]
trisha 1

You May Like