நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்..
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையில் அக்கட்சி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.. இந்த தோல்வியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு 36 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எஸ்.பி, வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏக்கள் தனியாக 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிமுக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் குழப்பத்திற்கு விளக்கம் அளித்த சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மக்களின் தீர்ப்பு அது.. அதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதிமுகவை காப்பாற்றப்பட வேண்டும்.
திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் எதிர்த்த திமுக உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக இபிஎஸ் திட்டம் இட்டார். அதற்கு நாங்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
Read more: வீடுகளில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க மோடி அறிவுரை.. காரணமும் மாற்று வழிகளும் என்ன..?



