BREAKING| தவெகவுக்கு அதிமுக ஆதரவு.. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை..! முடிவை அறிவித்தார் சி.வி சண்முகம்..

vijay cv sanmu

சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் குழப்பத்திற்கு மயிலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார். மக்களின் தீர்ப்பு அது.. அதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.


இதில் யாரையும் குறை கூறவில்லை. எங்களில் தவறு தான் இது. இனியாவது அதிமுகவை காப்பாற்றப்பட வேண்டும். 2021, 2024 தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எல்லாம் கை நழுவி விட்டது. கழக பொதுச்செயலாளர் விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அப்போது தான் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய முடியும். விரைவில் பொதுச்செயலாளர் பொதுக்குழுவை கூட்டுவார் என எதிர்ப்பார்க்கிறோம்.

இனியாவது எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவை காப்பாற்ற வேண்டும். ஆகையால் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்ய பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். கொறாடாவாக விஜயபாஸ்கர், செயலாளராக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் காமராஜர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் எதிர்த்த திமுக ஆதவுடன் அதிமுக ஆட்சி அமைத்து முதலமைச்சராக இபிஎஸ் திட்டம் இட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக அழிந்துவிடும் என நாங்கள் கூறினோம். இபிஎஸ் முடிவை கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ந்து போனோம். இப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். அதே சமயம் பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என தெரிவித்தார்.

Read more: இனி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் இல்லை.. ஜூலை 1 முதல் விபி-ஜி ராம் ஜி சட்டம் அமல்..!

English Summary

AIADMK supports TVK.. no more alliance with BJP..! – C.V. Shanmugam

Next Post

Breaking : சபாநாயகராக தேர்வானார் தவெகவின் ஜே.சி.டி பிரபாகர்..!

Tue May 12 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த நிலையில் இன்று முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.. தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த நிலையில், சபாநாயகராக ஜேசிடி பிரபாகர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக […]
jcd prabhakar

You May Like