காங்கிரஸ் அலுவலகம் சென்ற விஜய்க்கு புத்தகத்தை பரிசாக வழங்கிய செல்வப்பெருந்தகை..!

videoframe 47493704

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..


தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்..

இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்..

இந்த நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தானர்.. அப்போது வாசலில் வந்து பொன்னாடை அணிவித்து செல்வப்பெருந்தகை வரவேற்றார்.. தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காராஜர் படத்திற்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்..

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை விஜய் சந்தித்து பேசினார்.. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.. அப்போது காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகத்தை செல்வப்பெருந்தகை விஜய்க்கு பரிசாக வழங்கினார்..

Read More : “ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பிறகும் திருந்தவில்லை..!” – உதயநிதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

RUPA

Next Post

தவெகவுக்கு ஆதரவு.. சி.வி. சண்முகம் அணி எம்.எல்.ஏக்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

Tue May 12 , 2026
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. மேலும் இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என அதிமுக 2 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் […]
cv shanmugam vijay

You May Like