“விஜய் உடன் தவறான மனிதர்கள் இருக்கின்றனர்.. ஆட்சிக்கே ஆபத்து..” எச்சரிக்கும் பழ. கருப்பையா..!

vijay pala karupaiah

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய்யின் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகளவில் விஜய்க்கு ஆதரவு உள்ளது.. மேலும் அதிமுகவில் இருந்து பலரும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.. குறிப்பாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது..


இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது ” தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி நடந்துள்ளது.. 50 ஆண்டுகளாக ஊழலை பற்றி பேசிக் கொண்டே இருந்தோம்.. அந்த ஊழலை ஒழிக்க மக்களோ அரசியல் கட்சிகளோ தயாராக இல்லை..

அத்தகைய நம்பிக்கையை பெற்ற மனிதர் என்று மக்கள் யாரையும் அடையாளம் காணவில்லை.. இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்றார் என்பதை விட, மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. நான் கூட விஜய் வெல்வார் என்று நம்பவில்லை.. விஜய்யே நம்பினாரா என்று தெரியவில்லை..

மக்கள் வேட்பாளர்களை பற்றி கூட கவலைப்படவில்லை.. பணத்தின் சக்தியை தோற்கடித்துள்ளனர்.. முகம் தெரியாத வேட்பாளருக்கு சாதி மதம் கடந்து வாக்களித்துள்ளனர்.. இலவசங்களை மக்கள் வெறுத்தார்கள்.. நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று விஜய் சொன்ன சொல் நம்பிக்கையை நம்பிக்கையை பெற்றுள்ளது..

விஜய்யால் தவறான மனிதர்களை வைத்து கொண்டு சரியான செயல்களை செய்ய முடியாது.. விஜய் பலியாகிவிடுவாரோ என்று அஞ்சுகிறேன்.. சி.வி. சண்முகம் வீட்டிற்கு விஜய் போனதும், அங்குள்ளவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதும் மக்களிடையே தவறான நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.. விஜய் வந்துவிட்டதால் நமக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார் என்று அதிமுக எம்.எல்.ஏக்களை நம்ப வைத்துள்ளது..

ஆட்சியை தக்க வைக்க தவறான மனிதனை தேடி சென்றதால் ஆட்சியையே தவறானதாக்கிவிடும் என்பதால் இதனை சொல்கிறேன்.. லீமா ரோஸ் போவதாக கூறப்படுகிறது. லாட்டரி குடும்பம் தமிழ்நாடு அரசியலை கவ்வி கொள்ள இடம் கொடுக்கக்கூடாது..

விஜய் பலவீனமடையும் வரை நாடாள வேண்டும் என்பதே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது.. அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை.. வெளியில் இருந்து ஆதரவளிப்பவர்களால் எந்த சிக்கலும் இல்லை.. ஆனால் ஊழல் செய்த அதிமுகவினர் ஆட்சியில் பங்கெடுப்பதால் சிக்கல் ஏற்படும்..” என்று தெரிவித்தார்..

Read More : ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.. முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!

RUPA

Next Post

வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்திருப்போருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! மத்திய அரசின் முக்கிய முடிவு..!

Sat May 16 , 2026
2025-26 நிதியாண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு (PSBs) மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இம்முறை, வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகளைச் (balance sheets) சீரமைப்பதிலும், நிலுவைத் தொகைகளை வசூலிப்பதிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடன் தள்ளுபடிகள் (loan write-offs) மிகக் குறைந்த அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கித் துறை சார்ந்த கலைச்சொற்களில், “கடன் தள்ளுபடி” (write-off) என்பது, வசூலிப்பது கடினம் எனக் கருதப்படும் கடன்களை […]
tn bank job 2025

You May Like