ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.. முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!

cm vijay new

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல.. கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில்லை..

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருசக்கர வாகனங்கள், கார்களைப் பயன்படுத்தும் மக்களின் மாத வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.. வங்கிக்கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்குவோர் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும்..

பெட்ரோல் டீசல், விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவும் அதிகரிப்பதால் சந்தையில் மந்த நிலைக்கு வாய்ப்பு.. எனவே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

வாரத்திற்கு இருமுறை இணையவழி விசாரணைகள், வீட்டிலிருந்தே பணி.. உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு..!

Fri May 15 , 2026
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் தனது செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பணி ஏற்பாடுகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தப் புதிய நடவடிக்கைகளின்படி, வாரத்திற்கு இரண்டு முறை காணொளி வாயிலாக (virtual) வழக்கு விசாரணைகள் நடைபெறும்; மேலும், நேரடி விசாரணை நடைபெறும் நாட்களில் நீதிபதிகள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்துகொண்டு (carpool) நீதிமன்றத்திற்கு வருமாறு […]
supreme court 080520370 16x9 1 1

You May Like