மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை மார்ச் 1 முதல் ரூ.19 உயர்த்தப்பட்டது.
புதிய விலையின்படி, டெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ,1,795 -க்கும்,சென்னையில் ரூ.1,960-க்கும், விற்கப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது அறிவிப்பில் மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறையும் எனவும் குறிபிட்டுள்ளார்.