தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியது. இருப்பினும் த.வெ.க. அதிக இடங்களை பெற்றிருந்தாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து காங்கிரச், இடதுசாரிகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசு கடந்த 10-ந் தேதி பதவியேற்றது. அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பின்னர் 16-ந் தேதியன்று அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. எனினும் வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளதாக தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான மக்கள் மாளிகையில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த சூழலில், 23 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியலினத்தினர் உள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
அமைச்சர்கள் பட்டியல்:
1.ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி)
2.கமலி.எஸ். (அவினாசி)
3.சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்)
4.ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்)
5.வினோத் (கும்பகோணம்)
6.ராஜீவ் (திருவாடானை)
7.பி.ராஜ்குமார் (கடலூர்)
8.வி.காந்திராஜ் (அரக்கோணம்)
9.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)
10.கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
11.எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்)
12.எம்.விஜய் பாலாஜி (ஈரோடு)
13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)
14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)
15.ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
16.பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்)
17.ஆர்.குமார் (வேளச்சேரி)
18.கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)
19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு)
20.ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி)
21.டி.சரத்குமார் (தாம்பரம்)
22.என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்)
23.கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)



