Flash : குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி உயர்ந்து ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : உங்கள் டெபிட் கார்டு ATM-மில் சிக்கிக்கொண்டதா? உடனடியாக இதை செய்யுங்கள்..!

RUPA

Next Post

நுகர்வோருக்கு எச்சரிக்கை! கேஸ் இணைப்பின் பெயர் மாற்றம் குறித்த புதிய விதிகள்! இதை செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது..!

Sat May 23 , 2026
Oil companies and gas distribution agencies are tightening the regulations regarding LPG connections.
Lpg gas cylinders New

You May Like