கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார்.. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..
இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்றிரவு சிறுமி ஆடை கிழிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.. சிறுமி 2 பேரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல் முட்புதரில் வீசப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா..? என்பது உடற்கூராய்வின் முடிவில் தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்தி, மோகன் ராஜ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து கைதான மோகன் ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.. அவரை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.. இதையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்..
இந்த நிலையில் கோவை சூலூரில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலை கண்ணால் பார்க்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.. வெறிகொண்ட நாய் குழந்தையை குதறியது போல் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் குழந்தையின் உடல் கிடைத்துள்ளது என்றும அவர்கள் கூறியுள்ளனர்..
குழந்தையின் கை, முகம், கண்கள் என எதுவும் இல்லை, எல்லாம் முழுவதுமாக சிதைந்துள்ளது. குழந்தையின் கழுத்தை முழுவதுமாக திருப்பியும் அவளது தலைமுடியைக் கொண்டே கழுத்தை நெரித்துள்ளனர்.. குழந்தையின் உடல் முழுவதும் நாய் குதறியது போல் காயம் உள்ளது எனவும் சிறுமியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.. குழந்தையை கொடூரமாக கொன்றவர்களை அதைப் போலவே கொடூரமாக கொல்ல வேண்டும் எனவும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
மேலும் “ குழந்தை ஒரு நாயிடம் சிக்கி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது.. சிறுமியின் முகம் முழுவதும் நகக்கீறல்கள், வயிற்றுப்பகுதியில் ரத்தம் கட்டி இருந்தது.. குழந்தையின் உடலை பார்க்க முடியவில்லை.. குழந்தையின் கைகள் மற்றும் கால்களை உடைத்துள்ளனர்..
முதலில் குழந்தை நன்றாக இருப்பதாக கூறிய போலீசார் மாலை 6 மணிக்கு இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.. இவ்வளவு அக்கிரமம் செய்தவர்கள் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்.. இதற்கு ஒரு நீதியே இல்லையா..? அந்த குழந்தை என்ன பாடு பட்டிருக்கும்..? என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்..
Read More : வெறும் ரீல்ஸ் அரசாக இல்லாமல், ரியல் அரசாக இருக்க வேண்டும்.. கோவை சிறுமி சம்பவம்.. விஜய் அரசை சாடிய இபிஎஸ்..!



