கோவை சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம்.. கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்.. CM விஜய் உறுதி..!

cm vijay n 2

கோவை மாவட்டம் சூலூரில் நேற்று முன் தினம் மாயமான சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்..


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : வெறிநாய் குதறியது போல் இருந்த சடலம்.. சிறுமியின் முடியை வைத்தே கழுத்தை நெரித்த கொடூரர்கள்..! அதிர வைக்கும் தகவல்கள்..!

RUPA

Next Post

புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞர் சக்தி.. 51,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

Sat May 23 , 2026
Prime Minister Narendra Modi participated in this event via video conferencing and distributed appointment letters to over 51,000 youths selected across various Central Government departments.
pm modi rozgar mela 1 1

You May Like