தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.
இதனிடையே ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
எனினும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பெரும்பான்மை இடம் கிடைக்காததால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. குறிப்பாக அமுமக எம்.எல்.ஏவை கடத்தி ஆதரவு கடிதம் பெற்றதாகவும், குதிரை பேர அரசியல் நடத்தியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருந்தார்..
மறுபுறம் தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக இபிஎஸ் அணி, சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது.. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..
ராஜினாமா செய்த கையோடு மூவர்ம் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44ஆக குறைந்துள்ளது.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார்..
இந்த நிலையில் தவெகவின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : மோசமான குதிரை பேர அரசியல்.. புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தவெகவை விளாசிய இபிஎஸ்..!



