பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலர் உயிரிழப்பு.. பெல்ஜியத்தில் சோகம்..!

belgium train school bus crash

பெல்ஜியத்தின் புக்கென்ஹவுட் நகரில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குயின்டின், X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தச் சம்பவம் குறித்துத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“புக்கென்ஹவுட்டில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய இந்தத் துயரச் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தத்துடன் அறிந்தேன். உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு மிகுந்த மன வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்று குயின்டின் குறிப்பிட்டுள்ளார்..

சேதமடைந்த பேருந்து மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் அவசரகால சேவைகள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. எனினும் விபத்துக்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RUPA

Next Post

கேதுவின் அருளால், எதிர்பாராத யோகம்..! இந்த ராசிக்காரர்கள் வீடு வாங்குவது உறுதி..!

Tue May 26 , 2026
Currently, as the planet Ketu transits through the sign of Leo, it is bestowing its blessings upon four specific zodiac signs.
horoscope zodiac

You May Like