fbpx

Warning | நீங்க கடை வெச்சிருக்கீங்களா..? ஏப்ரலுக்குள் இதை செய்யாவிட்டால் அபராதம்..!!

தமிழ் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் வைக்க விரும்பினால், தமிழில் பெரியதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும், இறுதியாக விருப்ப மொழியிலும், 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை. கடந்த மாதம், தொழிலாளர் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், வணிகர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், ஏப்ரலுக்குப் பின் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும், அதன்பிறகும் வைக்காவிட்டால் வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவெடுத்துள்ளதை மாவட்டந்தோறும் விளக்கி வருகிறோம். என்றாலும் தற்போது ஆன்லைன் வியாபாரத்தால் மளிகை, துணி உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாகவும், அதனால், புதிதாக பெயர்ப்பலகை வைக்கும் செலவை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் பல வணிகர்கள் கூறினர். மேலும், மே மாதத்தில் வணிகர் சங்க மாநாடு நடக்க உள்ளதால் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனாலும் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

Read More : BREAKING | அம்பேத்கர் சிலையை தகர்க்கப் போவதாக மிரட்டல்..!! தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு..!!

Chella

Next Post

Dogs | ”கடிச்சா உயிரே போயிரும்”..!! பிட்புல் போன்ற கொடூரமான நாய் இனங்களுக்கு மத்திய அரசு தடை..!!

Thu Mar 14 , 2024
ஆக்ரோஷமான மற்றும் கொடூரமான நாய் இனங்களான ராட்வீலர்கள், பிட்புல்ஸ், டெரியர்கள், உல்ஃப் நாய்கள் மற்றும் மாஸ்டிஃப்கள் ஆகியவற்றின் இறக்குமதி இனப்பெருக்கம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆக்ரோஷமான நாய்களின் கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுடுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கூட்டப்பட்ட நிபுணர்கள் […]

You May Like