fbpx

Android Phone | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலான வேலைகளை பொதுமக்கள் செல்போன் மூலம் செய்கின்றனர். குறிப்பாக, ஆன்லைன் பேமேண்ட், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் ஆன்லைனில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, போலி செயலிகள் மோசடி மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடி பணத்தை கொள்ளை அடித்து வருகின்றன.

இந்நிலையில், லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகள் ஆண்ட்ராய்டு பயனர்களின் முக்கியமான தகவல்களை பெறலாம் என்பதால் கவனமாக இருக்க எச்சரித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் பல பாதிப்புகள் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Android பதிப்புகள் 12, 12L, 13 மற்றும் சமீபத்திய 14ஐயும் பாதிக்கின்றன. இந்தியாவில் இந்த பதிப்புகளை இயக்கும் ஃபோன்களின் எண்ணிக்கை எளிதாக 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக, ARM கூறுகள் மற்றும் MediaTek கூறுகள், Qualcomm கூறுகள் மற்றும் Qualcomm க்ளோஸ்-சோர்ஸ் கூறுகளுக்குள் பல பாதிப்புகள் இருப்பதை CERT-In சுட்டிக்காட்டி உள்ளது. பல சிப் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட பட்டியலில் இருப்பதால், Samsung, Realme, OnePlus, Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டை சேர்ந்த ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவர்கள் இந்தச் சிக்கலைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

மேலும், இந்த பாதிப்புகளுக்கான பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும். எனினும், பெரும்பாலான ஃபோன் பிராண்டுகள் இந்தச் சிக்கல்களைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, CERT தெரியாத தளங்களில் இருந்து செயலிகளை நிறுவுவதை பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரியாத அனுப்புநர்கள் அல்லது மின்னஞ்சலின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : Hotel | ஹோட்டல்களில் சுகாதாரமற்ற உணவா..? காலாவதியான தேதியா..? இனி ஈசியா புகார் தரலாம்..!! இதை நோட் பண்ணுங்க..!!

Chella

Next Post

Ranji Trophy | 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று மும்பை சாதனை.! போராடி தோற்ற விதர்பா அணி.!

Thu Mar 14 , 2024
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் விதர்பாவை வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் செய் விளையாடிய விதர்பா அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை […]

You May Like