பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார் மூலம் ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருவள்ளூர் மாவட்டம், வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் 11.07.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார் மூலம் ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில், கரூர் மாவட்டம், கடவூர் தெற்கு ஒன்றியம், தரகம்பட்டி ஊராட்சி, நவக்குளம் கிளைக் கழகச் செயலாளர் செந்தில்குமார் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும்; மேலும் இந்த விபத்தில், கடவூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தும்; கடவூர் தெற்கு ஒன்றியம், தரகம்பட்டி ஊராட்சி, வெங்கடேஸ்வரா நகர் கிளைக் கழகச் செயலாளர் சரவணன், மாவத்தூர் ஊராட்சி, கழுதிரிக்கப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெரு கிளைக் கழகச் செயலாளர் பொன்னம்பலம், கழுதிரிக்கப்பட்டி வடக்கு கிளைக் கழகச் செயலாளர் முருகேசன் ஆகியோர் லேசான காயமடைந்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தமும் அடைகிறேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்த செந்தில்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், இவரது குடும்பத்திற்கு கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக 7,00,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சதீஷ்குமாரின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாயும் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சரவணன் பொன்னம்பலம் முருகேசன் ஆகிய 3 பேரின் குடும்பங்களுக்கு தகவல் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read: வைரஸ் தொற்றுக்கும் மூளை புற்றுநோய் தீவிரமடைவதற்கும் இடையே உள்ள தொடர்பு…! IIT புதிய கண்டுபிடிப்பு