திருச்செந்தூர் விவகாரம்.. 2 பேர் டிஸ்மிஸ்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

minister ramesh 1

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கோயில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார்.. பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அவர் அன்னதான உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.. தரிசன ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்..


அன்னதான அலுவலகத்தில் பணிகளை சரிவர செய்யாத பணியாளர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தரக் கோரியும் அமைச்சர் உத்தரவிட்டார்.. அப்போது தரிசன வரிசையில் நின்ற அமைச்சர் ரகசிய ஆய்வு செய்தார்.. சாதாரண உடை அணிந்து, மாஸ்க் அணிந்திருந்த அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் ரூ. 4000 கேட்டுள்ளளனர். ஆனால் தன் கையில் பணம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் ஜிபேயில் அனுப்ப்புங்கள் என்று கூறி வசூல் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. விரைவு தரிசனத்திற்கா பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகருடன் சேர்ந்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதே போல் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் “ திருச்செந்தூர் முருகன் கோயிலில் முறைகேடு நடப்பதாக பல புகார்கள் வந்தன.. அந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வு செய்யும் போது, பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நேரடியாக தரிசனத்திற்கு அழைத்து செல்வதை கண்டுபிடித்திருக்கிறோம்..

இதில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் என எல்லோரும் சேர்ந்து தான் ஈடுபட்டு வருகின்றனர்.. அவர்கள் யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் காட்டாமல் நடவடிக்கை எடுப்போம்.. ஆனால் மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர்.. அவர்களிடம் நாங்கள் கேட்டது மன்னிப்பு கடிதம் கிடையாது, விளக்கக் கடிதம் தான்.. எனவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொய்..

இந்த ஆய்வின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும் இல்லாமல், எந்த தயக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. விரைவு தரிசனத்திற்கா பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகருடன் சேர்ந்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதே போல் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

Read More : ஒத்திவைத்த தீர்ப்பை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.. உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

RUPA

Next Post

மாத்திரைக்கு பதில் AirPods-ஐ விழுங்கிய பெண்..! வயிற்றுக்குள் ஒலித்த பாடல்..! அடுத்து என்ன நடந்தது தெரியுமா..?

Fri May 29 , 2026
A bizarre incident that occurred in the United States is currently being widely discussed on social media.
woman airpod

You May Like