Flash : சென்னை மணலியில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!

chennai fire oil factory

சென்னையை மணலி அருகே தனியார் எண்னெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது.. இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. இந்த நிலையில் இந்த எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.. இதனால் தொழிற்சாலையில் இருந்த ஆயில் பேரல்கள் பலத்த சத்தத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து சிதறின.. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழந்தது..


தீ பரவியதை தொடர்ந்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. எனினும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்..

மேலும் சில வாகனங்கள் வந்தால் மட்டுமே தீயை அணைக்க முடியும் என்று கூறப்படுகிறது.. பேரல்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது விவரம் எதுவும் வெளியாகவில்லை.. தீ விபத்துக்கான காரணம், சேத விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

English Summary

சென்னையை மணலி அருகே தனியார் எண்ணை தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து..

RUPA

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்..!

Mon May 25 , 2026
School Education Minister Rajmohan has stated that the date for reopening schools will be announced after consulting with the Chief Minister.
Minister Rajmohan School Students

You May Like