Breaking : ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு..!

Tn Govt 2025

தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செலவின செயலாளராக லலிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..


கன்னியாகுமரி ஆட்சியராக பிரதாப், திருச்சி ஆட்சியராக பிரதிக், திருவண்ணாமலை ஆட்சியராக வந்தனா கார்க் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை ஆட்சியராக பிரியா, நாமக்கல் ஆட்சியராக மதுபாலன், நெல்லை ஆட்சியராக ஆனந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன், தஞ்சை ஆட்சியராக ரேவதி, வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. தருமபுரி ஆட்சியராக சரவணன், தேனி ஆட்சியராக வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. மதுரை ஆட்சியராக ஆகாஷ், நாகை ஆட்சியராக பிரவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்..! யார் இவர்..?

English Summary

The Tamil Nadu government has issued orders transferring IAS officers in the state.

RUPA

You May Like