Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா..? சரிந்ததா..? நிலவரம் இதோ..!

gold jewelery

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! விரைவில் புதிய திட்டம் அமல்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold remains unchanged, with one sovereign selling for ₹1,16,000.

RUPA

Next Post

மறக்கப்பட்ட வைப்புத்தொகை, காப்பீடு உள்ளதா..? இனி ஒரே இணையதளம் போதும்..! மத்திய அரசு அதிரடி..!

Tue Jun 2 , 2026
மறக்கப்பட்ட நிதி முதலீடுகளைக் கண்டறிவதற்கும் மீட்பதற்கும் குடிமக்களுக்கு உதவும் வகையில், மத்திய நிதி அமைச்சகம் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ‘காமன் லேண்டிங் போர்டல்’ (Common Landing Portal) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இணைய வளம், உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகைகள், காப்பீட்டுக் கொள்கைகள், பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளைக் கண்டறிவதற்கான ஒழுங்குமுறைத் தேடல் அமைப்புகளுடன் பயனர்களை இணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட நுழைவாயிலாகச் செயல்படுகிறது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான […]
single portal for forgotten assets

You May Like