வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (அக்டோபர் 13) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு தாழ்வு பகுதி உருவாவதற்கு சாதகமான சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இந்த காற்று சுழற்சியின் தாக்கத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.



