தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”புதிய கல்விக்கொள்கை வேறு. பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.