“தீர்ந்துபோன சக்தி.. அதிமுகவை காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர்..” இபிஎஸ் விமர்சனத்திற்கு தவெக பதிலடி..!

eps cm vijay

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து, முதல்வரின் நேற்றைய திருச்சி பேச்சு குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.


தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்..

இந்த நிலையில் தவெகவின் ஐடி விங், இபிஎஸ்-ன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐடி விங் “ தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா? தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்?

தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா? எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?

மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?

கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?

பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.” என்று தெரிவித்துள்ளது..

Read More : “அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி.. ஆனா முதல்வர் விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது..” டிடிவி தினகரன் காட்டம்..!

RUPA

Next Post

3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்..! மத்திய அரசின் அற்புதமான திட்டம்..!

Tue Jun 2 , 2026
மத்திய அரசு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் சேமிக்க விரும்புவோருக்காகப் பல சிறு சேமிப்புத் திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊழியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்காகச் சிறப்புச் சேமிப்புத் திட்டங்களையும் அது உருவாக்கியுள்ளது. மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்தச் சேமிப்புக் கணக்குகளில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இத்திட்டங்கள் மத்திய அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுவதால், தங்கள் பணம் […]
money 2

You May Like