நிர்மல் குமார் பொய் சொல்றாரு.. விஜய் தரப்பு இபிஎஸ் கிட்ட நேரமே கேட்கல.. அதிமுக விளக்கம்..!

eps vijay 1

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் தலைமையான புதிய அரசு அமைந்துள்ளது.. முதல்வரான பிறகு விஜய் தமிழகத்தின் பிரதான அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்..


மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சி தலைவர்களையும் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. அப்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தரப்பையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார்..

ஆனால் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரை விஜய் சந்திக்கவில்லை.. இது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர்..

இந்த சூழலில் இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது ” முதல்வர் விஜய், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க விரும்பினார்.. அதன்படி ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்தார்.. எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை கருதி பழனிசாமி தரப்பில் நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் முதல்வர் விஜய் – இபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை.. இதில் வேறு எந்த காரணமும் இல்லை..” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நிர்மல் குமார் சொன்ன தகவலுக்கு அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.. இபிஎஸ்-ஐ சந்திக்க விஜய் தரப்பில் இருந்து நேரம் கேட்கவில்லை என்று அதிமுக தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. மேலு “ தவெக தரப்பில் இருந்து இபிஎஸ் அலுவலகத்தை தொடர்புகொள்ளவில்லை.. எந்த சூழலிலும் விஜய் அலுவலகத்தில் இருந்து இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்கவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..! யார் யாருக்கு எந்த மாவட்டம்..?

English Summary

The AIADMK has stated that no request for an appointment to meet EPS has been made from Vijay’s side.

RUPA

Next Post

500 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 700 ரூபாய் நோட்டுகள் வரப்போகுதா..? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன..?

Wed Jun 3 , 2026
Information that the Reserve Bank is going to issue ₹700 notes as a replacement for ₹500 notes is spreading rapidly across social media.
rbi currency 1 1

You May Like