நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த 21-ம் தேதி தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.. இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றனர். இதை தொடர்ந்து அமைச்சரவையில் இணைய விசிகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த 22-ம் தேதி தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது.. அதில் விசிகவின் வன்னி அரசும், ஐயுஎம்.எல் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..
இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த மாவட்டங்களுக்கு யார் பொறுப்பு..?
விழுப்புரம், கடலூர் – ஆனந்த்
சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா
மயிலாடுதுறை – வெங்கட் ரமணன்
திருவள்ளூர் – ரா.குமார்
நெல்லை – மரிய வில்சன்
பெரம்பலூர் – ராஜ்மோகன்
காஞ்சிபுரம் – க. தென்னரசு
திருப்பத்தூர் – ரஞ்சித்குமார்
செங்கல்பட்டு – சரத்குமார்
கள்ளக்குறிச்சி – வன்னி அரசு
ராணிப்பேட்டை – காந்திராஜ்
தருமபுரி, அரியலூர்– ராஜ்குமார்
நாகை – ஷாஜகான்
தஞ்சாவூர் – வினோத்
திருச்சி – ரமேஷ்
கரூர் – விஜய லட்சுமி
நாமக்கல் – லோகேஷ் தமிழ்செல்வன்
திருப்பூர் – அருண்ராஜ்
நீலகிரி – கமலி
வேலூர் – விஜய் பாலாஜி
ஈரோடு – செங்கோட்டையன்
கோவை – சம்பத்குமார்
மதுரை, தேனி – நிர்மல் குமார்
புதுக்கோட்டை – முகமது பர்வேஸ்
சிவகங்கை – டி.கே. பிரபு
கிருஷ்ணகிரி – கீர்த்தனா
விருதுநகர் – ஜெகதீஸ்வரி
திருவாரூர் – விஸ்வநாதன்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
ராமநாதபுரம் – மதன் ராஜா
சேலம் – விஜய் தமிழன் பார்த்திபன்
குமரி – ராஜேஷ்குமார்
தென்காசி – ராஜீவ்
திண்டுக்கல் – க.விக்னேஷ்
Read More : தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்..! கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..!



