2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..
2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து தபால் வாக்குகளை முறையாக எண்ணவில்லை என்றும், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி நீதிபதி உத்தரவிட்டார்.. அதன்படி 2019-ம் ஆண்டு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது..
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழழங்கினார். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார்.. இந்த தேர்தலில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆனதாகவும் தெரிவித்தார்.. இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகது, ஆனால் 5 ஆண்டுக்கான எம்.எல்.ஏ பென்சன் தொகையை இன்பதுரை கேட்க முடியாது என்றும் நீதிபதி அறிவித்தார்.



