டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் விஜய்..!

cm vijay president murmu

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்..


இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக டெல்லி சென்றுள்ளார்.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.. இன்று காலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார்.. டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்..

இந்த நிலையில் முதல்வர் விஜய் டெல்லியில் குடியரசு தலைவர் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.. முதல்வராக பதவியேற்ற பின் குடியரசு தலைவரை முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. மேலும் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் விஜய் சந்தித்தார்..

இந்த பயணத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் முதல்வர் விஜய் வரும் 12-ம் தேதி வரை டெல்லியில் இருப்பார் எனவும், 12-ம் தேதி காலை மத்திய அமைச்சர்கள் சிலரையும் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அன்றைய தினம் டெல்லியில் இருந்து அவர் தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது..

RUPA

Next Post

உங்கள் நுரையீரல் சரியாக செயல்பட வேண்டுமென்றால், இவற்றில் எதையும் செய்யாதீங்க..!

Wed Jun 10 , 2026
நாம் ஆரோக்கியமாக இருக்க, நம் உடலின் அனைத்துப் பாகங்களும் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உடல் உறுப்புகள் சரியாகச் செயல்படச் சரியான சத்துக்கள் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். ஆனால், தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்கள் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான நுரையீரலைப் பாதிக்கின்றன. முன்பு காற்று மாசுபாட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட நுரையீரல், இப்போது நாம் உண்ணும் உணவுகளாலும் பாதிக்கப்படுகிறது. எனவே, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பின்வரும் […]
lung cancer 1

You May Like