கர்நாடக முதல்வராக டி.கே சிவக்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.. பெங்களூரில் உள்ள லோக் பவனில் அமைந்துள்ள ‘கண்ணாடி மாளிகையில்’ (Glass House), இன்று மாலை 4.05 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.. இந்த விழாவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்றார்… ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லோத் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. இதன் மூலம் டி.கே. சிவக்குமாரின் 3 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது..
முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான பரமேஸ்வர் கர்நாடகாவின் துணை முதல்வராக பதவியேற்றார்.. டி.கே. சிவக்குமாருடன் இன்று முதல்கட்டமாக 13 அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
சித்தராமையா பதவி விலகியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே. சிவக்குமார், இன்று கர்நாடகத்தின் 25-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஒரு வலிமையான தலைவரான இவர், கட்சியின் சிக்கல்களைத் தீர்ப்பதில் தனக்கென ஒரு தனித்துவமான நற்பெயரை ஈட்டியுள்ளார்.
இந்தத் தலைமை மாற்றம் கர்நாடக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது. 2023 தேர்தல் உடன்படிக்கையின்படி கர்நாடகாவில் இந்த தலைமை மாற்றம் நடந்துள்ளது.. அந்த தேர்தல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்ற நிலையில் யார் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது..
எனினும் ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.. அதன்படி தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
2028 தேர்தலுக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. டி.கே. சிவக்குமாரின் தலைமையின் கீழ், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களும் மக்கள் நலத் திட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : 500 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 700 ரூபாய் நோட்டுகள் வரப்போகுதா..? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன..?



