சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. ராணிப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இவர் 11 மாதங்களாக மின் துறை தலைமை அலுவலகத்தில் வேலைபார்த்து வந்துள்ளார்.. அவர் 11 மாதமாக வேவு பார்த்துக் கொண்டே ஹார்டு டிஸ்க்களை திருடி விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..
இந்த நிலையில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : மோடி, அமித்ஷாவுக்கு RSS கொடுத்த சிக்னல்.. மீண்டும் தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை..? பரபரப்பு தகவல்கள்..!



