113 MLA-க்களை வைத்து எப்படி நிலையான அரசு அமைக்க முடியும்..? விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த ஆளுநர்..!

vijay governor 2

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தவெகவுக்கு ஆதரவு 113 ஆக கூடியுள்ளது.


இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டப்படி பதவியேற்பு விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை இன்று மீண்டும் விஜய் சந்தித்தார். ஆட்சி அமைப்பது தொடர்பான சில விளக்கங்களை கேட்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் மக்கள் பவனுக்கு விஜய் சென்று ஆளுநரை சந்தித்தார். அப்போது 118 எம்.எல்.ஏக்களுடன் வந்தால் பதவி பிரமாணம் செய்து வைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 113 எம் எல் ஏக்களை மட்டும் வைத்து எப்படி நிலையான ஆட்சி அமைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது பெரும்பான்மை இல்லாவிட்டால் ஆட்சி கவிழ்ப்பு நிலை ஏற்படும். பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மை கிடைத்துவிடும் என எந்த யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியும். வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீங்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: விஜய் முதலமைச்சராக பதவியேற்பது தான் சரி.. ஆளுநர் இதை செய்ய வேண்டும்..! திருமா சொன்னத கவனிச்சீங்களா..

English Summary

How can a stable government be formed with 113 MLAs? The Governor asked Vijay a series of questions..!

Next Post

திமுக - அதிமுக கூட்டணியா..? இபிஎஸ்-ன் முடிவு என்ன..? செம்மலை பரபரப்பு பதில்..!

Thu May 7 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் […]
semmalai 1

You May Like