குஷியில் அண்ணாமலை..! புதிய இயக்கத்தில் 4 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் இணைந்தனர்..!

524562 kannamalai 1

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அல்லது தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. சமீபத்தில் சிபிஎஸ்இ (CBSE) 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.


இது பாஜக தேசிய தலைமைக்கு எதிரான அதிருப்தியாகவே கருதப்பட்டது. பாஜக மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அண்ணாமலை அவசர பயணமாக டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

அப்போது பாஜக மேலிட தலைவர்கள், எதற்கும் அவசரப்பட வேண்டாம்.. பொறுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலையை சமசரம் செய்தனர் என்று கூறப்படுகிறது.. எனினும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அவரின் ராஜினாமா ஏற்கப்பட்டது..

இந்த சூழலில் புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அண்ணாமலை இன்று அறிவித்துள்ளார்.. சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர் “ we the leader என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளோம்.. இதனை விரைவில் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.. தமிழ்நாட்டில் அடுத்த நடைபெற உள்ள பொது தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்..

தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதே என் ஆசை..” என்றும் கூறியிருந்தார்..

இதை தொடர்ந்து அண்ணாமலையின் புதிய இயக்கமான www.wetheleader.org என்ற இணயதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.. நேரலையில் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்த போதே பலரும் இணைந்தனர்.. அதன்படி அண்ணாமலையின் புதிய இயக்கமான We the Leader இயக்கத்தில் சில நிமிடங்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்..

இந்த நிலையில் அண்ணாமலை புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட 4 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் இணைந்தனர்.. அதாவது ஒரு நிமிடத்திற்கு சுமார் 35 பேர் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.. We the Leader என இயக்கமாக தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.. இன்னும் பலர் தொடர்ந்து அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருவதால் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : இது அதிக பிரசங்கித்தனம்..! பிரவீன் சக்ரவர்த்தி போட்ட பதிவால் கடுப்பான சிபிஎம்..!

RUPA

Next Post

டீசல் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி முடிவு… சந்தைக்கு வருகிறது புதிய எரிபொருள்..!

Fri Jun 5 , 2026
டீசலுடன் ஐசோபியூட்டனால் (isobutanol) கலப்பதற்கான கட்டாய விதிமுறை இந்த ஆண்டிலேயே நடைமுறைக்கு வரக்கூடும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MORTH) செயலாளர் வி. உமாசங்கர் தெரிவித்தார்.. இன்றூ சிஐஐ (CII) நடத்திய ‘மல்டிமாடல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாட்டில்’ (Multimodal Transportation and Logistics Summit) பேசிய அவர், மின்சாரத்தால் இயங்கும் கனரக வணிக வாகனங்களுக்கான பேட்டரி மாற்றம் (battery swapping) மற்றும் சார்ஜிங் அமைப்பை […]
petrol diesel price

You May Like