Breaking : புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!

latha rajinikanth

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leader என்ற இயக்கத்தை தொடங்குவதாக இன்று அறிவித்தார்.. மேலும் “ தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதே என் ஆசை..” என்றும் கூறியிருந்தார்..


அண்ணாமலையின் புதிய இயக்கமான www.wetheleader.org என்ற இணயதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.. அதன்படி அண்ணாமலை புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட 5 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் இணைந்தனர்.. அதாவது ஒரு நிமிடத்திற்கு சுமார் 35 பேர் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.. We the Leader என இயக்கமாக தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்..

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தனி இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார்.. மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை தொடங்குவதாக லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.. மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்..

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் ஒன்றிணைவோம் என்றும் ஒன்றாக சேர்ந்து பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல காரியங்களை செய்வோம் என்றும் லதா தெரிவித்துள்ளார்.. ஒன்றாக சேர்வோம், ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வோம்.. மக்கள் சக்தி இருக்கு, வேலை செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கும் அனைவரும் எங்களை தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்..

மேலும் “ மூத்த குடிமக்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் எங்களை தொடர்புகொள்ளலாம்.. உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து, தமிழ்நாட்டின் நலனுக்காக எங்களுடன் வேலை செய்யலாம்.. 75500 80515, makkalmedaitn12@gmail.comஇல் தொடர்பு கொண்டு மக்கள் மேடை இயக்கத்தில் இணையலாம்..” என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..

Read More : குஷியில் அண்ணாமலை..! புதிய இயக்கத்தில் 4 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் இணைந்தனர்..!

RUPA

Next Post

“ஏற்கனவே 2500.. இது 2501.. மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கும் அண்ணாமலை..” சிபிஎம் காட்டமான பதிவு..!

Fri Jun 5 , 2026
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leader என்ற இயக்கத்தை தொடங்குவதாக இன்று அறிவித்தார்.. மேலும் “ தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் […]
modi amitshah annamalai

You May Like