சேலத்தில் ஒர் பொள்ளாச்சி சம்பவம்..? 50+ பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர்.. நண்பர்களுக்கும் இரையாக்கிய கொடூரம்..!

gang rape

சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக தவெக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.. 10-க்கும் மேற்பட்ட பென்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..


இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலம் ஆணையருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளார்.. இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. விசாரணைக்காக சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு மனு மாற்றப்பட்டது.. ஆனால் கொண்டாலம்பட்டி காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மணிகண்டன் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். மேலும் விசாரணை கூட மேற்கொள்ளாமல் காவல்துறை ஆதாரங்களை அழித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்..

மளிகை கடை வைத்திருக்கும் மணிகண்டன் பெண்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றி உள்ளார்.. வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து ஆசைக்கு இணங்க வைத்து வீடியோ எடுத்ததாக தவெக பிரமுக மணிகண்டன் மீது புகார் தெரிவித்துள்ளார்.. மேலும் வீடியோவை வைத்து பெண்கள் சிலரை விபசாரத்தில் தள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. மேலும் பல பெண்களை தனது நண்பர்களுக்கும் அவர் இரையாக்கியதாகவும் கூறப்படுகிறது.. இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

திமுக அரசின் சாதனைகள் மீது Sticker ஒட்டிய SofaModel அரசு.. போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir.. உதயநிதி காட்டம்..!

Fri Jun 12 , 2026
டெல்லியில் நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதாக கூறினார்.. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து […]
cm vijay udhanidhi

You May Like