ரூ.100 கோடி சொத்தை குறைத்து காட்டிய விஜய்.. வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு..!

vijay chennai high court

தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக தலைவர் விஜய் வேட்பு மனுவில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருப்பதாக துவக்கத்தில் இருந்தே பரபரப்பு கிளம்பிய போதிலும் பரிசீலனையில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளபட்டது. ஆனாலும் பெரம்பூர் தொகுதி வாக்காளர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் விஜய் வேட்பு மனுவில் முறைகேடு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அந்த மனுவில், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து இருக்கிறார். அவர் தாக்கல் செய்த 2 வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் எது சரியானது? என்ற கேள்வி எழுவதால் இதனை உறுதி செய்யும் விதமாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் இதன் விசாரணை அறிக்கையை, தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியிட பெரம்பூர் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.. என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை பெரம்பூர் தொகுதியில் அசையா சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என விஜய் காட்டியுள்ளார். ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் அசையா சொத்து மதிப்பு என ரூ.220.15 கோடி காட்டியுள்ளார். ரூ.100 கோடி அளவிற்கு சொத்து மதிப்பை பெரம்பூர் தொகுதியில் குறைத்து காட்டியிருக்கிறார்.

இரண்டு தொகுதிகளிலும் முறைக்கேடான சொத்து கணக்கை விஜய் காட்டியுள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில், சொத்து முறைக்கேடு விவகாரம் விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Read more: Walking: தினமும் 30 நிமிடங்கள் மட்டும் நடந்தால் போதும்.. உங்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..?

English Summary

Vijay understated his assets by Rs. 100 crore.. High Court orders Income Tax Department..!

Next Post

கேதுவின் கெட்ட பார்வை: இந்த 4 ராசிகளுக்கும் இனி சோதனை காலம்! கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?

Mon Apr 20 , 2026
Ketu's evil aspect: This is a testing time for these 4 zodiac signs! How to avoid difficulties?
Ketu transit

You May Like