திமுக அரசின் சாதனைகள் மீது Sticker ஒட்டிய SofaModel அரசு.. போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir.. உதயநிதி காட்டம்..!

cm vijay udhanidhi

டெல்லியில் நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதாக கூறினார்..


இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது.. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – பெண் கல்வி – பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும் தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு!.. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி – மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : விவசாயிகளின் வலிகள், வேதனைகள் புரியாமல் வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்ட பொய்க்கால் குதிரை அரசு.. விஜய் அரசை சாடிய இபிஎஸ்..!

RUPA

Next Post

Breaking : ராஜினாமா செய்த 4 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ்..! 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்..!

Fri Jun 12 , 2026
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]
admk mla

You May Like