சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..
இந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. பதவியை ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை கோரி அதிமுக மனு அளித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. 7 நாட்களில் விளக்கம் அளிக்க கூறி சபாநயாகர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..



