சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார்.. தனது 75-வது வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்த வயதில் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான்.
நடிகர் என்பதை தாண்டி தேசிய அளவில் ஆளுமைமிக்க நபராகவும் வலம் வருகிறார்.. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் ரஜினி பேசலாம்.. மேலும் இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரிடமும் ரஜினி நினைத்தால் தொடர்பு கொண்டு பேச முடியும்.. அந்தளவுக்கு செல்வாக்கு மிக்கவர் ரஜினிகாந்த்.. அதனால் தான் ரஜினி பெயரை பயன்படுத்தினால் அவரது ரசிகர்கள் ஆதரவை பெற முடியும் என்ற நோக்கில் புதிய கட்சி மற்றும் அமைப்பு தொடங்குவோர் அவரின் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் ரஜினியின் பெயரை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என ரஜினியின் ரசிகர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் “ நமது அன்பு தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அவரது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சியும் அல்லது அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. தலைவரின் உத்தரவுப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது.. அகில இந்திய ரஜினி ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சம்பத் குமார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்..
அண்ணாமலை, ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆதரவு என்ற தகவல் வெளியான நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.. அண்ணாமலை புதிய அமைப்பை தொடங்கிய போது ரஜினி உடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று வலைதளத்தில் தனது அரசியல் வருகை குறித்து பேசிய போது ரஜினி பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார்..



