அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்.. நயினார் நாகேந்திரன் விட்ட வார்த்தை.. வெடித்த சர்ச்சை..!

Nainar nagendran 2025

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய அவர் “ இப்போது இந்த இடைத்தேர்தல்கள் வரப்போகிறது.. இந்த இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது.. இப்போது தானே உங்களை மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தனர்.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து குதிரை பேரம் பேசி அக்கட்சி எம்.எல்.ஏ காமராஜை விலைக்கு வாங்கினார்கள்..


இதை சிபிஐ விசாரித்து, குதிரை பேரம் நடந்தத்தை, தவெக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோருகிறேன்.. அடுத்த அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது.. அங்கு யாராவது இறந்துவிட்டார்களா என தெரியவில்லை.. அடுத்து விராலிமலைக்கு இடைத்தேர்தல் வரும்.. மதுராந்தகம், ஈரோடு, பெருந்துறை, தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும்.. ஆனால் இந்த இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது..

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இருந்து ஒவ்வொருவரையும் விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார்.. குதிரை பேரம் நடைபெறுதை யாரும் செய்திகளில் சொல்லவில்லை.. புதிதாக ஆட்சி அமைத்த கட்சிக்கு 6 மாதமாவது அவகாசம் கொடுக்க வேண்டும்.. ஆனால் அவகாசமே கொடுக்க முடியாத அளவுக்கு ஆட்சி மோசமாக நடந்து கொண்டிருக்கிறது..” என்று தெரிவித்தார்..

Read More : கோயில் கடைகளில் விலைப் பட்டியல் கட்டாயம்..! இனி புதிய கட்டுப்பாடுகள்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு..!

RUPA

Next Post

Flash : விராலிமலை தொகுதி காலியானது.. வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 6 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்..?

Wed Jun 17 , 2026
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து […]
vijay bhaskar

You May Like