தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.. இதையடுத்து, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 5 பேரும் தவெகவில் இணைந்துவிட்டனர்..
இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் நின்று சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.. நேற்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.. அவரின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படுவதாக ராஜினாமா அறிவித்தார்..
இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசின் கெசட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது..
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்.. நயினார் நாகேந்திரன் விட்ட வார்த்தை.. வெடித்த சர்ச்சை..!



