தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன் தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்..
மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் மட்டும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.. வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிகளவில் அதிகரித்துள்ளது.. உள்நாட்டு உற்பத்தி 2.25 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதமாக சரிந்துள்ளது.. தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.. 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட இந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது. இந்த கடன் அன்றாட செலவுகளை சமாளிக்க பெறப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தவெக அரசின் வெள்ளை அறிக்கையை திமுக ஐடி விங் கடுமையாக சாடி உள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அதில் “ 2021 திமுக அரசின் வெள்ளை அறிக்கை: This report is not an attempt to create a rationale for diluting or abandoning the commitments made to the people during the recently concluded elections. அதாவது, “நிதி நெருக்கடி இருந்தாலும், மக்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தோ, எங்களுடைய கடமைகளில் இருந்தோ நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம், அதை தட்டிக்கழிக்க இந்த அறிக்கையைப் பயன்படுத்த மாட்டோம்” என்று துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு!
2026 தொடைநடுங்கி தவெக அரசின் வெள்ளை அறிக்கை: the fiscal space available for taking up new programmes during the year can only be very minimal. அதாவது, இந்த ‘மங்குனி’ 24ஆம் புலிகேசி அரசோ, “ஐயோ, எங்ககிட்ட காசு இல்ல, நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அதனால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி ரொம்ப ரொம்ப கம்மி”னு பம்மி, தங்களின் இயலாமையை மூடிமறைக்க இந்த வெள்ளை அறிக்கையையே ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது!
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட நிதி நிலைமை எப்படி இருக்குனு தெரியாமலா ஓட்டுக் கேட்டீங்க விஜய்? அப்போதெல்லாம் ஜோசியர் உங்ககிட்ட சொல்லலையா? நிறைவேற்ற முடியாத அத்தனை போலி வாக்குறுதிகளையும் வாரி இறைத்துவிட்டு, இப்ப நாற்காலி கிடைச்ச உடனே “பட்ஜெட்ல இடமில்லை”னு காதுல பூ சுத்துறீங்க!
நிர்வாக ஆளுமையோ, பொருளாதாரப் புத்தியோ இல்லாத ஒரு ‘முதிர்ச்சியற்ற’ கத்துக்குட்டி அரசாங்கம் தமிழ்நாட்டின் அரியணையில் ஏறியதன் அப்பட்டமான விளைவு தான் இந்த நிதித் தப்பியோட்டம்! விவசாயிக்குத் தண்ணீரும் வாங்கித் தரத் துப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கத் துப்பில்லை, இப்ப கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் துப்பில்லை!” என்று தெரிவித்துள்ளது..



