” வாய திறங்க CM…” கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை..!

dmk mlas assembly

 தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது..


அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.. 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது..

இந்த நிலையில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். ’வாய திறங்க CM’ என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.. மேலும் ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி..’, ’கதறல் கேட்குதா CM சார்’, ‘Reels இங்கேReal எங்கே,’ ‘ Hero இப்போ Zero’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் திமுக எம்.எல்.ஏக்கள் கையில் ஏந்தி வந்துள்ளனர்..

இந்த கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் முதல்வர் பதிலளிக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.. சட்டம் ஒழுங்கு, குதிரை பேரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்..

தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த ஆளுநர் உரையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500ஆக உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகுமா..? அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற அறிவிப்பு வெளியாகுமா..? பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடுமா..? என்ற பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Read More : “முதிர்ச்சியற்ற கத்துக்குட்டி அரசாங்கம்.. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துப்பில்லை..” தவெக அரசை விளாசிய திமுக..!

RUPA

Next Post

Flash : ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..! நகைப்பிரியர்கள் ஹேப்பி..

Thu Jun 18 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold jewlery

You May Like