நவகிரகங்களில் சுப யோகத்தையும் மங்களத்தையும் வாரி வழங்கும் நாயகனாக திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி ஞானம், கல்வி, கூர்மையான அறிவு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு முதன்மை காரணியாக இவர் விளங்குகிறார்.
இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான் கடந்த ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார். குரு பகவானின் இந்த உதயம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட 3 ராசியினருக்கு யோகக் காலம் தொடங்கி, நிதி நிலையில் மாபெரும் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளது.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு குருவின் உதயத்தால் வாழ்வில் அடுத்தடுத்து முன்னேற்ற பாதைகள் திறக்கவுள்ளன. நீண்ட நாட்களாக திட்டமிட்டு தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் இனி வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய ஒப்பந்தங்களும் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும், அதற்கேற்ப பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி வரவில் இருந்து வந்த தடைகள் விலகி, பொருளாதார ரீதியாக புதிய உயரத்தை தொடுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு அவர்களின் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இது அமையும். நிதி நிலைமை முன்பை விட மிகவும் வலுவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பதுடன், முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் அளிக்கப்படும் பொறுப்புகளைத் திறம்படச் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறுவார்கள். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடிந்து மன அமைதி பெருகும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த குரு உதயம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெற்றுத் தரவுள்ளது. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தொட்டதெல்லாம் பொன்னாகும் வகையில் தொடர் வெற்றிகள் குவியும். எதிர்பாராத பண வரவால் பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், வாழ்க்கைத்துணையுடன் அன்யோனியமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.
Read More : நிரம்பியது பில்லூர் அணை..!! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!



