Breaking : இன்ப அதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.3,040 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி ரூ.15,000 சரிவு..! நகைப்பிரியர்கள் ஹேப்பி..!

jewels

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : பெண்களுக்கான அருமையான திட்டம்..! மாதந்தோறும் ரூ. 7,000 கொடுக்கும் மத்திய அரசு..! விண்ணப்பித்தாலே போதும்..!

RUPA

Next Post

மெகா வேலைவாய்ப்பு..! ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்..! 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

Fri Jun 19 , 2026
ரயில்வே துறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிடவுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஜூன் 30 அன்று வெளியிடப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6,565 தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் 323 ‘டெக்னீஷியன் கிரேடு 1 […]
railway 2025

You May Like