தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன..
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக 2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.. அதே போல் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.. அவர் தவெகவில் இணைகிறாரா அல்லது திமுகவில் இணைகிறாரா என்பது தெரியவில்லை.. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் என பலரும் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் செல்லூர் ராஜு இதுகுறித்து தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தான். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி.” என்று குறிப்பிட்டுள்ளார்..
2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு தோல்வியடைந்தார். அவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இத்தொகுதியில் தவெக வேட்பாளர் தங்கபாண்டியன் 88,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “இது மிகவும் கவலைக்கிடமான விஷயம், தவெக அரசு உடனே இதை செய்ய வேண்டும்..” அண்ணாமலை வலியுறுத்தல்..!



